Difference between revisions of "வேள்பாரி"
(Created page with "Category: Kalavathi வேல் முருகனில் தொடங்கி 'வேள்பாரி'யான, கடையெழு வள்ளல்களி...") |
m |
||
Line 1: | Line 1: | ||
[[Category: Kalavathi]] | [[Category: Kalavathi]] | ||
[[File:வேள்பாரி.jpg|300px|Right|thumb| வேள்பாரி]] | |||
வேல் முருகனில் தொடங்கி 'வேள்பாரி'யான, கடையெழு வள்ளல்களில், பெரும் கொடை வள்ளலான வேந்தனின் கதை. | வேல் முருகனில் தொடங்கி 'வேள்பாரி'யான, கடையெழு வள்ளல்களில், பெரும் கொடை வள்ளலான வேந்தனின் கதை. | ||
வேள்பாரி வேந்தனின் கதை. இல்லையில்லை கவிதை... அப்படியும் சொல்லி சுருக்கி விட முடியாது. | வேள்பாரி வேந்தனின் கதை. இல்லையில்லை கவிதை... அப்படியும் சொல்லி சுருக்கி விட முடியாது. |
Revision as of 18:17, 14 April 2020
வேல் முருகனில் தொடங்கி 'வேள்பாரி'யான, கடையெழு வள்ளல்களில், பெரும் கொடை வள்ளலான வேந்தனின் கதை. வேள்பாரி வேந்தனின் கதை. இல்லையில்லை கவிதை... அப்படியும் சொல்லி சுருக்கி விட முடியாது. இது காவியம்.
வேள்பாரியே நீ என்னை சங்ககாலத்திற்கு அழைத்துச் சென்று விட்டாய். உன்னோடு பயணிப்பது எனக்கு பேரானந்தமாக உள்ளது. நிறைய நாவல்கள் படித்து அனுபவப்பட்டவள் அல்ல நான். சொல்லப்போனால் என் வாசிப்பின் ஆரம்பமே உன்னோடு தான் தொடங்குகிறது. அரை நூற்றாண்டை அநியாயமாய் தொலைத்து விட்டேனே என என்னை ஏக்கம் கொள்ளச் செய்திவிட்டாயே எவ்வியின் வழித் தோன்றலே. உன் மூலம் இனி நான் யூ டர்ன் அடித்து என் தமிழ் நோக்கி,என் சங்கம் நோக்கி,என் மூதாதையர் நோக்கி, சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் என் ஆதி அறிய புறப்பட்டு விட்டேன் இந்த ஆதி மலையை அடையாளமாக எடுத்துக் கொண்டு.
சிறு குறு நாவல்கள் மட்டுமே படித்ததுண்டு. பள்ளி காலங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில வரலாறுகளை புரட்டி பார்த்ததுண்டு. எல்லாமே ஒரு வரிக் கவிதையாக மட்டுமே என் சிந்தைக்குள் இருந்த நிலை மாறி , ஒவ்வொரு ஆளுமையையும் ஆழமாக அறிய, சரித்திர சமுத்திரத்தில் முங்கி முத்தெடுக்க காரணமாகிராய் நீ. உன்னைக் கண்டு வியப்பதா...? உன்னை தன் எழுத்தாற்றலால் எங்கள் கண்ணுக்குள் உயிரோடு உலவ விட்ட எழுத்தாளரை கண்டு கரம் குவிப்பதா...? இரண்டுக்கும் இடையே சிக்கித் தவிக்கிறேன். முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி என்ற ஒற்றை வரிக் கவிதையை எங்களுக்கு காவியமாக்கி தந்த எழுத்தாளர் சு.வெங்கடேசன் அவர்களுக்கு முதலில் என் நெஞ்சம் நிறைந்த நன்றி.
வேளீர் குலத் தலைவனே உனக்குள்ளே, குறிப்பாக கபிலரிடம் உனக்கான அந்த உயர்ந்த நட்புக்குள்ளேயே அடிக்கு...அடி... அதாவது ஒவ்வொரு வரியிலும் புதைந்து போகிறேன். மீண்டு எழ முடியவில்லை. அதிலும் ஒரு சுகம் இருப்பதால் அங்கேயே குளிர் காய்கிறேன். எனக்கு 'பேரெலி ' போர்வை வேண்டாம். உங்களுக்கான நட்பின் நினைவுகளே என்னை இதமாக்குகிறது. கூடு என்பது பறவைக்கான தங்குமிடம். வானம் தான் வாழ்விடம். உண்மை தான் ஒரு நாள் உங்களின் வானமே நாங்களாய் விரிந்திரிப்போம். என்ன ஒரு ஆழ்ந்த நம்பிக்கை நட்பின் பால் உனக்கு. திகைத்துப் போகிறேன்.
'பேசும் ஒலியை ஓவியமாய் வரைவது தான் எழுத்து'
சிந்தித்துப் பார்க்கிறேன்..
ஆமாம் அதிர்வுகள் வளிமத்துள் ஊடுருவி, செவி நரம்பால் தாக்கப்பட்டு, மூளையில் உணரப்படும் ஒலியை, விரல் வடிக்கும் சித்திரம் தான் எழுத்து.
உணர்த்த முயல்கிறார் கபிலர் நீலனுக்கு.
மரத்தின் கொப்புகளை பார்த்து பழக்கப் பட்ட நம்மை, மரத்தின் கொம்புகளுக்குள் நுழைத்து, கபிலரோடு நம்மையும் கலங்கடிக்கும் அகுதையின் வழித் தோன்றலான வேளாண் குல வாரிசு நீலன் என்ற மாவீரன்,மயிலாவின் மனதுக்கு நெருக்கமானவன் நம் மனதுக்குள்ளேயும் தங்கி விடுகிறான்.
தீயில் சுட்ட உணவு 'ஆண் உணவு'அது அவசரத்தின் அடையாளம்.
நீரில் வேக வைத்த உணவு 'பெண் உணவு'அது பக்குவத்தின் அடையாளம்.
நீரும் மண்ணும் போலத்தான் ஆணும் பெண்ணும்.
ஒன்றோடொன்று கலக்கவும் முடியும், மறுநொடியே ஒன்றை விட்டு மற்றொன்று கழலவும் முடியும்.
இது ஒன்று தான் இயற்கை உருவாக்கிய ஒரே பிரிவினை.
அப்படியே இருந்திருக்கலாமோ.
அமைதி காக்கப்பட்டிருக்கும்.
'ஏழிலைப்பாலை' பேரதிசியம் . ஆம் எம்பெருமான் முருகனுக்கு காதல் வரம் தந்த பேரதிசியமரம்.
மரத்தின் உணர்வுகளும் கூட பூக்கின்றன.
புரிந்து கொள்ள முடியாத பேரதிசியம் தான்.
பெண்ணின் ஸ்பரிசம் பட்டு பேரதிசியமாகும் ஏழிலைப்பாலை.
கார்த்திகேயன் வழியாக கார்த்திகையின் கதை.
பத்து பேரதிசியங்களுல் ஒன்றான 'கருநெல்லி' உண்டு பகலிலும் விண்மீன்களின் நகர்வறிந்த வேலன்.
வியந்து போகிறேன் விண்ணை நோக்கி.
ஆறைக் (6) குறியாய்க் கொண்ட ஆறுமுகனுக்குள் இத்தனை குறியீடுகளா.
காலங்களும் கதிரவனும், சேவலும் மயிலும்,நெருப்பும் மழையும் .
இப்படி கார்த்திகைக்குள் காலக் கணக்கு பொதிந்து கிடக்கிறது.
கடித்து இழுக்க விலங்குகளுக்கு பல் இருப்பது போல் மனிதனுக்கு கதை.
ஈட்டியை விசை கொண்டு எறியும் எங்கள் வீரர்களின் கை தன்னிகரற்ற வலிமை கொண்டிருப்பது சதையால் அல்ல...கதையால்.
ஆம் பாரி, இக் கதையால் தான் உன் தன்னிகரற்ற வலிமையை தரணி பாடுகிறது.
சதை மறைந்தால் என்ன?
சரித்திரம் படைக்கும் உன் கதை காலம் உள்ள வரை.
புதிய மேனி கொண்டு மட்டுமே தழுவி வாழும் காதல் வாழ்க்கை நாகத்தினுடையது.காதல் புனிதமானது என்பது அங்கிருந்து தான் ஆரம்பமாகியதோ.
தீக்களி அப்பி உயிர் பிழைக்க அவர்களுக்கு அறிவுறுத்தியது யாரோ.
ஆலாப் பறவையின் பெயர் தாங்கி ஆலாய்ப் பறக்கும் இளமருதனின் 'ஆலா' குதிரை. இந்த 'ஆலா ' குதிரை இன்று வரை எங்கள் மதுரை வட்டாரத்தில் ஆலாய்ப் பறந்து கொண்டு தான் இருக்கிறது சொல் வழக்கில் என்பது, எங்களுக்கும் அதாவது என் மதுரை மண்ணுக்கும் இளமருதனுக்குமான உறவுக்கு ஒரு சான்று. அவசரப் படாதே என்பதை என் மக்கள் ஆலாய்ப் பறக்காதே என்னும் சொல்லாடலில் தான் குறிப்பிடுகின்றனர். என் விபரம் அறிந்து, என் தந்தையே என்னை இந்த 'ஆலா ' குதிரை (வார்த்தை) கொண்டு, அடிக்கடி கடிவாளம் போட்ட நினைவுகள் வந்து, எத்தனையோ நூற்றாண்டுகளின் தூரம் தொலைக்கிறது.
'ஓடும் நீருக்குள் உறங்கும் நதி' - பெண். என்ன ஒரு அழகான ஒரு வரிக் கவிதை. புரிந்து கொள்ள முடியாத புதிராக இருக்கலாம் பெண். இருப்பினும் நறுக்கென்று நான்கே சொல் போட்டு எத்தனை நளினமாக, எத்தனை அழகான ஒற்றைவரி. பெண்ணாகவே இருந்த போதும், வியந்து தான் போகிறேன்.
'கொல்லிக்காட்டு விதைகள் ' உயிருக்கு நியாயம் செய்கிறது.
கொற்றவை கூத்து குடல் நடுங்க வைக்கிறது. கூடவே தர்மம் பேசப்படுகிறது.
தெரிந்து கொள்வதற்கும் , அறிந்து கொள்வதற்கும் உள்ள வித்தியாசத்தை அங்கவை மூலம் கபிலர் நமக்கும் பாடம் எடுக்கிறார்.
'தேக்கன்' காடறிய நம்மையும் கவனமாக அழைத்துச் செல்கிறார்.
எத்தனையோ விலங்குகளும் பறவைகளும் மட்டுமல்லாது மரம் செடி கொடிகள் பற்றியும் அறிந்து கொள்ள வைக்கிறார்கள்.
அவற்றிற்குள் புதைந்து கிடக்கும் அதிசியங்களை அட்டவணை படுத்துகிறார்கள்.
வானம், காடு, மலை, மரம், செடி கொடி , மண், நீர், நிலம், நெருப்பு, கடல், வணிகம், காதல், போர் இவையே வாழ்க்கையாய், வாழ முயற்சித்திருக்கிறான். மனிதன் மனிதனாக வாழ்ந்திருக்கிறான்.
இயற்கை ஒன்றுக்குள் ஒன்றாக தனது உண்மைகளை மறைத்து வைத்து விளையாடுகிறது.
இவற்றை கண்டறிவதும், புரிந்து கொள்ளுவதும் எவ்வளவு சுவையூட்டக்கூடிய ஒன்று என்று
உம் கூற்றுப்படி எங்களையும் அனுபவிக்க வைத்திருக்கிறாய்.
'காலம் மனித அனுமானங்களுக்கு அப்பால் இயங்கிக் கொண்டே தான் இருக்கிறது. அதை எதிர்பாராத கணத்தில் சந்திக்கும் போது, மனிதன் பொறி கலங்கிப் போவதைத் தவிர வேறு வழி என்ன' உண்மை... முற்றிலும் உண்மை... சத்தியமான வார்த்தைகள். இப்பொழுது மனித குலமே பொரி கலங்கித் தான் போய்க் கொண்டு இருக்கிறது இந்த கொரோனாவினால். பாதி கடல் (கதை) தான் கடந்து இருக்கிறேன். இப்பொழுதே என் மூச்சை பிடித்து நிறுத்துகிறாய். திக்கு முக்காடுவதால் சிறிது இளைப்பாறுதல் வேண்டி இடைவெளி விட்டு இருக்கிறேன். சிறிய இடைவெளி தான். மீண்டும் புதுத் தெம்போடு உன்னை தொடரப் போகிறேன். இனி வரப் போவது யுத்தகளம் அல்லவா. நானும் என்னை திடப்படுத்தி திறன் கொண்டு வருவேன். சிந்தை சிறகடிக்கும் பறம்பு நாட்டில் சந்திப்போம் மறு பாதியில்...🙏🙏🙏.