நீர்

From HORTS 1993
Jump to navigation Jump to search

உடலின் தண்ணீர் பூதத்துடன் சம்பந்தப்பட்ட உறுப்புகள் சிறுநீரகம் (Kidney) மற்றும் மூத்திரப்பை (Urinary Bladder). இவற்றின் குறைபாடுகள் வெளிப்படும் உறுப்பு காதுகள். தொடர்புடைய உணர்ச்சி “பயம்”. தொடர்பான சுவை “உப்பு”.

“உப்பு சாப்பிட்டவன் தண்ணீர் குடிப்பான்” என்றொரு பழமொழி உண்டு. மாற்றியும் சொல்லலாம் - “அதிகம் தண்ணீர் குடித்தால் உப்பு அதிகம் சாப்பிட வேண்டியிருக்கும்”.

“பயத்தில் காதடைத்தது அல்லது சிறுநீர் வந்தது” என்று சொல்வார்கள்; சில குழந்தைகள் இரவில் தூங்கும்போது படுக்கையில் சிறுநீர் கழிக்கும்; காரணம் பகலில் எதையாவது பார்த்து பயந்திருக்கும்; அல்லது பள்ளியிலோ எங்கோ யாராவது விளையாட்டாய் பயமுறுத்தியது மனதில் பதிந்திருக்கும். மனதில் பயம் அதிகமானால் கிட்னி செயல்பாடு பாதிக்கும்.

கவனிக்கவும். நம் உடம்பில் தண்ணீர் பூதம் செயலூக்கத்தில் இருக்கும்போது, நம் மனதில் அல்லது வாய் வழி உருவாக்கும் எண்ணங்கள்/சொற்கள் மிக மிக வீரியம் கொள்கின்றன. Water is a very good receptor.

உடம்பின் தண்ணீர் பூதத்திற்கான உணவு - வாய் வழி குடிக்கும் தண்ணீர், குளிக்கும்போதும் கால், கை கழுவும்போதும் தோல் வழியாக உள்ளே போகும் தண்ணீர் (குளிப்பதும் சாப்பிடுகிற மாதிரிதான்). தண்ணீர் குடிக்கும்போதும், குளிக்கும்போதும் எண்ணங்கள் சுத்தமாய், நன்றாய் இருப்பது நல்லது; ஏனென்றால் அப்போதைய எண்ணங்கள் மிக பலமடங்கு சக்தி பெற்றவைகளாய் உள்ளில் பதியும்.

உதாரணத்திற்கு, நம் விருப்பங்களை, நமக்கு நிறைவேற வேண்டிய ஆசைகளை, நாம் குளிக்கும்போதும், தண்ணீர் குடிக்கும்போதும் மனதுக்குள் சொல்லிக்கொண்டால், அவை உண்மையில் நடப்பதற்கான வாய்ப்புக்கள் மிக மிக அதிகம். குளித்து ஈரத் தலையுடனோ, ஈரத் துணியுடனோ, ஈர உடம்புடனோ கோவிலில் சாமி கும்பிட சொன்னது அதற்குத்தான். கோவில்களில் குளங்கள் அமைத்தது இதற்காகத்தான். (இப்படியும் சொல்லலாம் - எல்லா நீர் நிலையோரங்களிலும் கோவில்கள் உண்டாக்கியது இதற்குத்தான்; குளத்தில முங்கி குளிச்சிட்டு, குளத்தங்கரை பிள்ளையார்ட்ட வேண்டும்போது, வேண்டுதல்களை நிறைவேத்துறது யாருன்னு இப்ப புரிஞ்சுதா?! :)); கோவில் உள்ளே போகும்போது குளிக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை, கால்கள் கைகள் கழுவச் சொன்னதும் இதற்குத்தான். கோவிலை விடுங்கள்; வீட்டிற்குள் போகும்போதே, கால் கை கழுவிவிட்டு போவதே நம் பெரியோர்கள் வழக்கம்.

இப்போதைய அவசர சூழலில் (!!!), பாத்ரூமையே கோவில் மாதிரி நினைச்சுக்கலாம்!; தலையில் தண்ணீர் ஊற்றும்போது, நம் ஆசைகளை எல்லாம் வரிசையா உள்ள சொல்லிக்கலாம் (சத்தமாவும் சொல்லிக்கலாம்!).

வேண்டுதல்களுக்கு ஒரு குறிப்பு; positive விஷயத்தையே negative-வா வேண்டக்கூடாது; உதாரணத்துக்கு, “எனக்கு கஷ்டம் குடுக்காத”-ன்றதுக்கு பதிலா “எனக்கு நிம்மதியும், சந்தோஷமும் குடு”-ன்னு வேண்டிக்கலாம். அடுத்த ஸ்டெப்; ஏன் அதக்குடு இதக்குடுன்னு வேண்டணும்; ஏன் நமக்கு எல்லாமே கிடைச்சுட்ட மாதிரி சொல்லிக்க கூடாது?!; “எனக்கு ஆரோக்கியம் குடு”-ன்றதுக்கு பதிலா, ஏன் “நான் ஆரோக்கியமாய் இருக்கிறேன்”-ன்னு சொல்லிக்ககூடாது?; ஏன் future-ஐ, present-க்கு கொண்டுவரக் கூடாது?

குழந்தைகள் தண்ணீர் குடிக்கும்போதோ (பெரியவர்களும்தான்), அவர்களை குளிப்பாட்டி விடும்போதோ (குளிக்கும்போதோ) எதிர்மறை சொற்களால் திட்டாமலிருப்பது நல்லது. குளிக்கையில் அவர்கள் தலையில் தண்ணீர் ஊற்றும்போது “நீ பெரிய ஆளா வருவ! ஆரோக்கியமா சந்தோஷமா இருப்ப” என்று வாழ்த்தலாம்.

பிடிக்காதவர்களை தலையில் தண்ணீர் ஊற்றி அல்லது உச்சந்தலையில் தண்ணீர் தெளித்து “இனிமே உனக்கும் எனக்கும் சம்பந்தமில்லை” என்று சொல்லும் பழக்கம் இதனால்தான் (இது நம்ம ஆளு படத்தில் வர்ற மாதிரி!).

நீங்கள் பார்த்திருப்பீர்கள் - முந்தைய முனிவர்கள் யாருக்காவது சாபம் விடும்போது, அவர்கள் வைத்திருக்கும் கமண்டலத்திலிருந்து கொஞ்சம் தண்ணீர் எடுத்து எதிரிலிருப்பவரின் தலையில் தெளித்து “நீ கல்லாக கடவாய்”-னு சபிப்பார்கள்.

எல்லா நீரும் இறைவன்; கடலும் இறைவன்; குடிக்கும் தண்ணீரும் இறைவன்; கோவில்களில் உள்ளங்கைகளில் ஊற்றப்படும் நீரும்...

நீரே...நீரே...என் சுகமே...என் இறையே...