வலி
ஹே...முதலில் அதீத உரிமையோடு " பரிகாசத்திற்கு உட்படுத்தப்படுகிறேன் என்பதை ஏற்க மறுக்கிறேன்! உன்னை கொஞ்சம் சீண்டி பார்த்து....மனதிற்குள் கொஞ்சம் சிரித்துக்கொள்கிறோம் அவ்வளவு தான்! அதனால்....நீ பட்டது (வலி) எதுவானாலும்....! நாங்கள் பெற்றது அதிகம்!
பாரதி சொன்னது போல! "ஒரு தாயின் வயிற்றில் பிறந்தோர்...! தம்முள்....சண்டை செய்தாலும் சகோதரர் அன்றோ??!!" சரி என் கருத்துக்கு வருகிறேன்.
உண்மையில் இந்த மானுடம் தழைப்பதே...மாற்று சிந்தனை கொண்ட உன்னை போன்ற சிலரால் தான்!
"வீதியிலே...ஒருவன் வீழ்ந்து கிடக்கிறான்...எல்லோரும் கடந்து போகிறார்கள்...ஒருத்தி மட்டும் அவனை வாஞ்சையோடு அள்ளி எடுத்து உன்னை போன்றவர்களுக்கு நான் இருக்கிறேன் என்று சொல்லி "அக்னேஸ்" என்பவள் "அன்னை தெரசா" ஆகிறாள்!
மரத்தில் இருந்து விழுந்த ஆப்பிள் பழத்தை...சும்மனே எடுத்து சாப்பிட்டு விட்டு போகாமல்...ஏன் விழுந்தது என்று யோசித்ததனால் தான் நமக்கு நியூட்டன் கிடைத்தான்!
யுரேக்கா...யுரேக்கா...என்று கூவி...ஆடை இல்லாமல் ஓடுகிறோம் என்று கூட தெரியாமல் அம்மணமாய் ஓடிய ஆர்கிமிடிஸ்சால் தான் நமக்கு...கடலில் மிதக்கும் கப்பல் கிடைத்தது!
றெக்கைகள் கொண்டு பறக்கும் பறவைகளை பார்த்து...பெரு மூச்சு விட்ட...ரைட்ஸ் சகோதரர்கள்...தான் றெக்கை இல்லாமல் பறக்கும் விமானத்தை நமக்கு கொடையாக தந்தார்கள்!
அன்றைக்கு இவர்களை போன்ற அத்தனை பேரையும்...பையித்தியத்தின் மொத்த உருவமாகவே பார்த்தது இந்த சமூகம்!
ஆசிய ஜோதி புத்தனும்...கருணா மூர்த்தி இயேசுவும் கூட....சாமானியர்களிடம் இருந்து வேறு பட்டு நின்றவர்கள் தான்!
பாட்டாளிகளின் மாபெரும் போராளி " கார்ல் மார்க்ஸ்"
"எங்கே அநீதியை கண்டாலும் உன் மனம் தாங்க முடியாமல் துடித்தெழுகிறதா?? அப்படியானால்...நீயும் எனக்கு நண்பன் தான்" என்று சொல்லி உலக சமத்துவத்திற்கு போராடிய "சே குவாரா"
கத்தி இன்றி...ரத்தம் இன்றி யுத்தம் செய்த "காந்தி"
சொந்த நாட்டிலேயே....அடிமை விலங்கறுக்க... இன்னுமொரு சுதந்திர போர் புரிந்த புரட்சியாளன் அம்பேத்கர்!!
"சுயமாக சிந்திக்காமல்...ஒரு கட்சியின் பின்னால் நின்று அது செய்வதெல்லாம் சரியென்று வாதிடுவது தான் தேச பக்தி என்றால் அந்த தேசபக்தி என்னுடைய செருப்புக்கு சமானம்" என்று போலி சுதேசிகளுக்கு தன் செருப்பை கழற்றிய "நேதாஜி" சுபாஷ்...!
அவ்வளவு ஏன்....நம்ம ஊரிலேயே "பார்ப்பானை ஐயர் என்ற காலமும் போச்சே!! பரங்கியனை...துரை என்ற காலமும் போச்சே" என்று அக்ரகாரதுக்குள்ளேயே....உட்கார்ந்து கொண்டு...அவர்களுக்கு எதிராகவே குரல் எழுப்பிய...மகா கவி பாரதி!
பயிர் வாடினால் எனக்கென்ன என்றில்லாமல் தன் மனம் வாடிய "வள்ளலார்" என்று....இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்!
உண்மையில்....இப்படி....ஏதோ ஒரு விதத்தில் தனித்து நின்றவர்களால் தான் மானுடம் தழைத்து வந்திருக்கிறது!
மற்றவர்களைப் போல் இல்லாமல்...கொஞ்சம் முரண்பட்டு....நின்றவர்களால் தான் இந்த சமூகம்...கொஞ்சம் முன்னேறி இருக்கிறது!
ஆக...எந்த முரண்பாடும் தூங்கிக்கொண்டிருப்பவனை...தட்டி எழுப்பும் என்றால்! ஒரு நல்ல சமூகத்தை...கட்டி எழுப்பும் என்றால்....! அந்த முரணாளி....பரிகாசத்திற்குரியவன் அல்லன்! போற்றுதலுக்குரியவன்!
அதனால்....நாங்க உன்னை சொல்வதெல்லாம் வளர்ச்சிக்கு...உரமாகட்டும்! நெஞ்சுக்கு...பாரமாக வேண்டாம்! 🙏🙂
(Type...பண்ணி...பண்ணி...கையே வலிக்குதுடா தம்பீ!!!)