Ayyar&Co

From HORTS 1993
Jump to navigation Jump to search


இவங்களுக்கு நான் party குடுக்க போயி... நண்பன் சாட் item ஆர்டர் பண்ணினான்.. அங்கே கூட்டம் அதிகம் இருந்ததால் item வர வர வர எல்லோருக்கும் கொடுத்து விட்டு கடைசியாக சர்வர் எனக்கு வைத்தான்..! நண்பன் இதை இப்படி தான் சாப்பிடணும் அத அப்படி தான் சாப்பிடணும்-னு instruction வேற.. எனக்கு வைத்தது அவ்வளவு சூடாயிருக்கும் எனக்கு தெரியவே இல்லை... நான் ஒரு ஸ்பூன் எடுத்து வாயில் போட்டேன்... அவ்வளவு தான்... என்னால் துப்பவும் முடியவில்லை... விழுங்கவும் முடியவில்லை... அப்படி இப்படி வெளியில் ஓடி வந்து துப்புவதுற்குள் முழு வாயும் முழுமையாக வெந்து போய் விட்டது! அதற்கு மேல் என்னால் சாப்பிட முடியாமல் திரும்பியது அல்லாமல் அந்த வெந்து போனது சரியாக ஏறக்குறைய ஒன்றரை மதங்கள் ஆனது... ! அது தீ காயத்தை விட மோசமாய் இருந்தது என்றால்...அந்த Doctorஏ ஒரு நிமிடம் ஆடி போனார். ஒரு மாதம் முழுக்க ஆறிய கஞ்சி.. other காரமில்லா liquid food only!

Ofcourse நண்பனும் ரொம்ப வருத்தத்திற்கு உள்ளானான்!

Hospital க்கும் அப்போதப்போது நண்பன் என்னோடு வந்தது பசுமையான நினைவு! இன்னமும் இந்த சாட் கடைகளை பார்த்தால்... உடனேயே இது எனக்கு... நினைவுக்கு வந்து விடும்! யாருக்கும் இப்படி ஆக கூடாது என்பது போலான அனுபவம் அது!😋 இந்த அனுபவத்தை தந்த அய்யர் and Co என்றால் எப்படி மறக்க முடியும்! 😄