Balakumaran

From HORTS 1993
Jump to navigation Jump to search
Balakumaran1.jpg

தஞ்சை தந்த சோழ வேந்தன் , எழுத்து சித்தர் பாலகுமாரன் நினைவு தினம் இன்று. நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் இருநூற்றுக்கும் மேற்பட்ட நெடுங்கதைகளையும், கவிதை கட்டுரைகளையும் எழுதி தமிழ் வளர்த்த மிக முக்கிய எழுத்தாளர். கெட்டிக்காரத்தனம் என்பது படிப்போ, மொழி வலிமையோ,கணிதமோ, காசு சம்பாதிப்பதோ அல்ல. மனிதனை மனிதன் புரிந்து கொள்வது தான் என மனிதம் பேசியவர். அவரின் நினைவாக அவர் பேசிய சில வரிகள்...👇

பயணம் மேற்கொள்கிற போது ஒரு மனிதனுக்கு வாழ்க்கையின் நிலையாமை புரிகிறது. உலகத்தினுடைய பிரமாண்டம் புரிகிறது. எத்தனை விதமான மக்கள், எத்தனை விதமான வாழ்க்கை, எத்தனை விதமான முயற்சிகள், எத்தனை விதமான வெற்றி தோல்விகள் என்பதும் தெரிந்து போகின்றன. நல்லதும் கெட்டதும் முகத்திற்கு நேரே வந்து பயணத்தின் போது ஓடுகின்றன. நம்முடைய பிரச்சினை ஒன்றுமே இல்லை. நம்மை விட வேதனைப் படுபவர்கள் அதிகம் என்பது புரிந்து போகிறது. பூமியின் பரப்பு புரியத் தான் தூசினும் தூசாக இருப்பது தெரிந்து விடுகிறது. ஒரு தூசு இன்னொரு தூசோடு சண்டை போடுவதற்கு என்ன இருக்கிறது என்ற தெளிவு பிறக்கிறது...🙏