Barathiyaar
கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி.
ஆம்.... வாழ்க்கையை கவிதையாகச் செய்தவன், இன்று வரை கவிதையாகவே வாழ்பவன்...! என் கவி...நம் மகாகவி...!
எட்டயபுரம் தந்த கவி சிங்கம். மீசை முறுக்கும் முண்டாசுக் கவி. காளியின் தாசன். கவிப் பேரரசன். கண்ணம்மாவின் காதலன். செல்லம்மாவின் பாரதிக்கு இன்று நூற்றி முப்பத்தெட்டாவது பிறந்த தினம்.
உலகம் உள்ளவரை... நம் தாய் தமிழ் உறவுகள் வாழும் வரை... கவியால் வாழும் என் பாரதியே... உன்னுள் என்றும் வாழ நினைக்கிறேன் என் பாரதியே...!
உடல் கொண்டு அவன் வாழ்ந்தது என்னவோ சொற்ப வருஷங்கள் தான்...!
ஆனால் நம்மில் இன்று வரை அவன் உயிர் கொண்டு வாழ்கிறான்.
சொல்லாய்... கவிதையாய்... காவியமாய்.... வாழ்கிறான் நம் கவி... மகாகவி.
காக்கைச் சிறகினிலே நந்தலாலா!-நின்தன் கரியநிறந் தோன்றுதையே நந்தலாலா! பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா!-நின்தன் பச்சை நிறந் தோன்றுதையே நந்தலாலா! கேட்குமொலியி லெல்லாம் நந்தலாலா!-நின்தன் கீத மிசைக்குதடா நந்தலாலா! தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா!-நின்னைத் தீண்டுமின்பந் தோன்றுதடா நந்தலாலா!
நின்னை சரணடைந்தேன்,
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா நின்னை சரணடைந்தேன்
பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும் பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும் என்னை கவலைகள் தின்ன தகாத்தென்று..
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா நின்னை சரணடைந்தேன்
மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில் குடிமை புகுந்தன, கொண்டுருவை போக்கென –
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா நின்னை சரணடைந்தேன்
துன்பம் இனி இல்லை, சோர்வில்லை சோர்வில்லை, தோற்பில்லை அன்பு நெறியில் அறன்கள் வளர்த்திட நல்லவை நாட்டிட, தீயவை ஓட்டிட
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா நின்னை சரணடைந்தேன்.
நின்னை சரணடைந்தேன் பாரதி... ஆம் பாரதி நான் உன்னை சரணடைந்தேன்...🙏
வாழ்க பாரதி. வளர்க தமிழ்.
என்றும் அன்புடன் காலை வணக்கம்...🙏